எருது விடும் விழாவில் 150 காளைகள் சீறிப்பாய்ந்தன


எருது விடும் விழாவில் 150 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

வாணியம்பாடி அருகே குருபவாணிகுண்டாவில் நடந்த எருதுவிடும் விழாவில் 150 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் வேடிக்கை பார்த்தவர்களை மாடுகள் முட்டியதில் மூதாட்டி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

எருதுவிடும் விழா

வாணியம்பாடி அருகே குருபவாணிகுண்டா கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. விழாவிற்கு தாசில்தார் குமார் தலைமை வகித்தார். விழாவில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஆம்பூர், ஆந்திர மாநிலம் குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கலந்து கொள்ள கொண்டு வரப்பட்டிருந்தன. அவை மருத்துவ பரிசோதனைகள் முடிந்து களம் இறங்க தயாராக நிறுத்தப்பட்டு இருந்தன.

போட்டிகள் தொடங்கும் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சப்-கலெக்டர் லட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடந்து போட்டிகள் தொடங்கின. இதில் 150 காளைகள் பங்கேற்று சீிப்பாய்ந்து ஓடின.

போட்டியில் குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசு 40 ஆயிரமும் 3-வது பரிசு 30ஆயிரம் உட்பட 39 பரிசுகள் வழங்கப்பட்டன.

10 பேர் காயம்

விழாவின்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் வேடிக்கை பார்த்தவர்களை முட்டியதில் ஒரு மூதாட்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு பணியில் வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரெண்டு விஜயகுமார், வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் 100-க்கும் போலீசார் மற்றும் தீயணைப்புதுறை, வருவாய்த் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.


Next Story