இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட  150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த பள்ளம் அன்னைநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரும், தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக பதிவு எண்ணைக் கொண்ட இருசக்கர வாகனத்தில் 3 பிளாஸ்டிக் பைகளில் சுமார் 150 கிலோ ரேஷன் அரிசியை ஒருவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ரேஷன் அரிசியுடன், இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ரேஷன் அரிசியை நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனம் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story