பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 1½ லட்சம் பேர் விண்ணப்பம்


பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 1½ லட்சம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 3 Aug 2023 3:00 AM IST (Updated: 3 Aug 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 1½ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேனி

பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 1½ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் பதிவு முகாம்கள் கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் 2 கட்டமாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் 259 இடங்களில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை முதற்கட்ட முகாம்கள் நடக்கின்றன.

இந்த 2 தாலுகா பகுதிகளிலும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 209 விண்ணப்பப் படிவங்களை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று வினியோகம் செய்திருந்தனர். அதில், நேற்று வரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 461 பேர் விண்ணப்பித்தனர்.

2-ம் கட்ட முகாம்

இதன் தொடர்ச்சியாக தேனி, போடி, ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் 258 இடங்களில், நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடக்கின்றன. 2-வது கட்ட முகாம்களுக்கான விண்ணப்ப படிவங்கள் வீடு, வீடாக வினியோகம் செய்யும் பணிகள் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தோடு சேர்த்து விண்ணப்பப்பதிவு முகாமுக்கு வர வேண்டிய நாள், நேரம் குறித்த விவரங்கள் அடங்கிய டோக்கனும் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story