குடியரசு தின விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு


குடியரசு தின விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு
x

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையத்தில் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையத்தில் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் முருகேஷ் கொடியேற்றுகிறார். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நடக்கிறது.

இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், அருணாசலேஸ்வரர் கோவில் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் சோதனை

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் மோப்பநாய் மூலம் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பஸ்களில் ஏறியும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story