காரில் கடத்திய 151 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் கடத்திய 151 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி சோதனை சாவடியில் நத்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிலட்சுமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும், அதை பேரையூர், வத்திராயிருப்பு பகுதிகளில் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. புகையிலை கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம் தொங்குட்டிபாளையத்தை சேர்ந்த மணிவண்ணன்(வயது44), தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ்(35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 14 சாக்குகளில் இருந்த 151 கிலோ புகையிலை பொருட்கள், 4 செல்போன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story