1,575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
முக்கூடல் அருகே 1,575 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவில் 1,575 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த லோடு ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்தனர். அப்போது லோடு ஆட்டோ ஓட்டி வந்த காருக்குறிச்சியை சேர்ந்த சிவா என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story