ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரியில் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்
ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரியில் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 16-ந் தேதியன்று (புதன்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 16-ந்தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக அடுத்த மாதம்(செப்டம்பர்) 9-ந் தேதி (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தன்று குமரி மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்து.
----
Related Tags :
Next Story