குடிநீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல்
மேலப்பாளையத்தில் குடிநீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் ராமசாமி, இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
50-வது வார்டு ஆமீன்புரத்தில் உள்ள வீடுகளில் சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சி குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 16 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story