16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்


16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
x

ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய சீர்காழி வாலிபரை சென்னை ரெயில்வே பாதுகாப்புபடை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

காட்பாடி

ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய சீர்காழி வாலிபரை சென்னை ரெயில்வே பாதுகாப்புபடை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் பற்றிய போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓடும் ரெயிலில் திடீர் சோதனை

டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று அதிகாலை காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது.

சேவூருக்கும் காட்பாடிக்கும் இடையில் சென்னை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் ரெயில் பெட்டிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வாலிபர் சந்தேகம் அளிக்கும் வகையில் இரண்டு டிராவலர் பைகளை வைத்திருந்தார். அதனை எடுத்து போலீசார் சோதனை செய்தனர்.

16 கிலோ கஞ்சா பறிமுதல்

அந்த பைகளில் 8 பண்டல்களில் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த வாலிபர் சீர்காழி கோவில் ரத வீதியை சேர்ந்த சேகர் மகன் கபிலன் (வயது 23) என்று தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் சென்னை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story