திருச்சி மாநகரில் ஒரு மாதத்தில் 16 ரவுடிகள் கைது


திருச்சி மாநகரில் ஒரு மாதத்தில் 16 ரவுடிகள் கைது
x

திருச்சி மாநகரில் ஒரு மாதத்தில் 16 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 72 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 16 சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதி காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெற வேண்டி 32 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 301 ேபர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.


Next Story