தனிப்பிரிவு போலீசார் 16 பேர் இடமாற்றம்


தனிப்பிரிவு போலீசார் 16 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

கண்டாச்சிபுரம் தனிப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய தனிப்பிரிவுக்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் திண்டிவனம் உட்கோட்ட தனிப்பிரிவுக்கும், திருவெண்ணெய்நல்லூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல் கஞ்சனூர் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ராம்குமார் காணை தனிப்பிரிவுக்கும், மயிலம் போலீஸ் நிலைய ஏட்டு முருகன் வெள்ளிமேடுபேட்டை தனிப்பிரிவு ஏட்டாகவும், அங்கிருந்த தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் கெடார் தனிப்பிரிவு ஏட்டாகவும், கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய ஏட்டு விஜய் மரக்காணம் தனிப்பிரிவு ஏட்டாகவும், விழுப்புரம் தாலுகா தனிப்பிரிவு ஏட்டு தங்கதுரை ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட மொத்தம் 16 தனிப்பிரிவு போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பிறப்பித்துள்ளார்.


Next Story