160 போலீசார் ராமநாதபுரம் பயணம்


160 போலீசார் ராமநாதபுரம் பயணம்
x

160 போலீசார் ராமநாதபுரம் புறப்பட்டு சென்றனர்.

வேலூர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடக்கிறது. இங்கு பாதுகாப்பு பணிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து போலீசார் செல்கின்றனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகரன், பூபதிராஜன் ஆகியோர் மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 160 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நேற்று சென்றனர்.

முன்னதாக வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து அறிவுரை வழங்கினார்.


Next Story