புதுமைப்பெண் திட்டத்தில் 163 மாணவிகள் தேர்வு


புதுமைப்பெண் திட்டத்தில் 163 மாணவிகள் தேர்வு
x

நீலகிரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 163 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 163 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த பங்களிப்பாளர்கள்

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டமான 'புதுமைப்பெண் திட்டத்தை' தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

இதைதொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் புதுமைப்பெண் திட்ட பை வழங்கும் விழா நடந்தது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட பைகளுடன் வங்கி பற்று அட்டைகளையும், புதுமைப்பெண் திட்டத்தில் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஆர்.டி.ஓ. துரைசாமி, அரசு ஆஸ்பத்திரி டீன் மனோகரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story