16,409 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.


16,409 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16,409 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16,409 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று முன் தினம் முடிவடைந்தது. இன்று (புதன்கிழமை) பிளஸ்-1 பொது தேர்வும் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 260 மாணவர்களும், 8 ஆயிரத்து 149 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 409 பேரும், தனித்தேர்வர்கள் 844 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு 67 தேர்வு மையங்களும், தனிதேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்களும் என மொத்தம் 70 தேர்வு மையங்கள் என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 133 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story