25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் நலத்திட்ட உதவிகள்


25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் இந்திய படை பிரிவில் பணிபுரிந்து பணியிடை காலமானவர்கள் மற்றும் கொடுங்காயமுற்றோர்கள் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 6 பேர்களுக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 2 பேருக்கு காதொலி கருவிகள், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் திருநங்கைகளுக்கான சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் 12 பேருக்கு சிறு தொழில் கடன் உதவி தொகைக்கான ஆணை என ஆக மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.




Next Story