17 பிச்சைக்காரர்கள் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
17 பிச்சைக்காரர்கள் கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
17 பிச்சைக்காரர்கள் கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
வாணியம்பாடி பஸ் நிலையம், ெரயில் நிலையம், கடைவீதிகள், பள்ளி, கல்லூரி முன்பு பிச்சைக்காரர்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்த புகார்களை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்களை பிடித்து ஒரு வேனில் ஏற்றினர். இவர்களில் 7 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள், 4 பேர்சிறுவர்கள் மஒ்றும் ஒரு சிறுமி. 17 பேரையும் பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story