ஊரக திறனாய்வு தேர்வில் 17அரசுபள்ளி மாணவர்கள் சாதனை


ஊரக திறனாய்வு தேர்வில் 17அரசுபள்ளி மாணவர்கள் சாதனை
x

முத்துப்பேட்டை ஊரக திறனாய்வு தேர்வில் 17அரசுபள்ளி மாணவர்கள் சாதனை

திருவாரூர்

முத்துப்பேட்டை:

ஊரக திறனாய்வு தேர்வில் ஒரே பள்ளியில் பயிலும் 17 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஊரக திறனாய்வு தேர்வு

முத்துப்பேட்டையை அடுத்த தொண்டியகாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

இதில் மாணவிகள் மீனா, மதனியா, அபிகா, தர்ஷினி, ஸ்ரீமகா, கோபிகா, ரித்னா, தர்ஷினி, தீபா, மதுஜா ஆகிய 10 பேரும், மாணவர்கள் கவுதம், நிதிஷ், சுபிராஜ், சுதன், யோகேஷ், நிஷாந்த், கவியரசன் உள்ளிட்ட 7 பேரும் என ஒரே பள்ளியில் பயிலும் 17 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட அளவில் அதிக எண்ணிக்கையிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரே பள்ளியில் பயிலும்...

அதுமட்டுமின்றி இந்த 17 மாணவர்களில், மாணவி மீனா மாவட்ட அளவில் முதலிடமும், மாணவர் சுதன் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை பெற்றுள்ளனர். சாதனை பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உத்திராபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கமலா பூவனம் மற்றும் ஆசிரியர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் கூறுகையில், எங்கள் பள்ளியில் மாவட்ட அளவில் 17 மாணவர்கள் என அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் இரு மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளதை கண்டு பெருமைக்கொள்கிறோம் என்றார்.

50 மாணவர்களில் 17 மாணவர்கள்...

ஆசிரியர் பயிற்றுனர் ஸ்ரீதரன் கூறும்ேபாது, முத்துப்பேட்டை ஒன்றிய பள்ளியின் மகத்தான சாதனையாக 2022-23-ம் ஆண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வானது சமீபத்தில் நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 50 மாணவர்களில், 17 மாணவர்கள் முத்துப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆவர். அந்த பள்ளி மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களையும் கல்வித்துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


Related Tags :
Next Story