வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின


வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின
x

வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையானது சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மிகபெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி முழு கொள்ளளவான 18 அடியை எட்டி தற்போது கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

17 ஏரிகள் நிரம்பின

காஞ்சீபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

இதில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 51 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது. மீதமுள்ள 329 ஏரிகள் 26 சதவீத கொள்ளளவை எட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டம் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வருவாய்த்து றை, மின்சாரம், போலீஸ்துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு துறை என 11 துறையை சேர்ந்தவர்கள் அடங்கிய 21 குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுத்தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது‌.


Next Story