31 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் கடன் உதவி


31 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் கடன் உதவி
x

31 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் கடன் உதவி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடைகள் பராமரிப்பு பணிக்காக 31 விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருதூர் வடக்கு கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி, 31 விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்து 94 ஆயிரத்துக்கான கடன் தொகையை வழங்கினார். இதில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, மருதூர் வடக்கு கூட்டுறவு சங்க செயலாளர் காரியப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story