ஒடுகத்தூர் ஆட்டு சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு வியாபாரம்
ஒடுகத்தூர் ஆட்டு சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடக்கிறது. இங்கு பல்வேறு நகரங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகள் வாங்க போட்டி ஏற்பட்டதால் ஆட்டின் உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டின் விலையை நிர்ணயித்தனர். வழக்கமாக 11 மணிக்கு சந்தை முடிந்துவிடும். ஆனால் நேற்று ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் மதியம் 1 மணி வரை ஆட்டுச் சந்தை நடந்தது. சுமார் ரூ.17 லட்சத்திற்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story