17 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு


17 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 17 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான், 500-க்கும் மேற்பட்ட குரங்குகள், 100-க்கும் மேற்பட்ட மட்ட குதிரைகள் மற்றும் நரி, முயல், மயில் என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டங்கள், உணவுகள் கொடுக்க தொடங்கினர். அதை தொடர்ந்து இயற்கையாக வளர்ந்த குரங்குகள் தன்னிலை மறந்து கோடியக்கரை பகுதியில் இருந்து வெளியேறி வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டன. தற்போது 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் மேற்கண்ட பகுதியில் தங்கி பொதுமக்களை அச்சுறுத்தியும், வீடுகளிலிருந்து இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வது என குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குரங்களை பிடிக்கக்கோரி பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்ததனர். அதை தொடர்ந்து கோடியக்கரை வனசரகர் அயூப்கான் மற்றும் வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் 17 குரங்குகள் பிடிக்கப்பட்டு, கோடியக்கரை வனச்சரகத்தில் விடப்பட்டது.


Next Story