கடலூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கடலூர் மாவட்டத்தில்   17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x

கடலூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 73 ஆயிரத்து 441 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக கடலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 9 பேருக்கும், குறிஞ்சிப்பாடி, மங்களூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 பேருக்கும் என மொத்தம் 17 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 127 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story