கடந்த மாதம் நடந்த சாலை விபத்துகளில் 17 பேர் பலி


கடந்த மாதம் நடந்த சாலை விபத்துகளில் 17 பேர் பலி
x

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்துகளில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதைத்தவிர பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலையை கடக்கும் பகுதிகளில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் (பேரிகார்டு), மண் நிரப்பிய இரும்பு பேரல்கள் வைத்து வாகனங்கள் மெதுவாக செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை விபத்தினால் பலர் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 268 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மாவட்ட முழுவதும் நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். 101 பேர் லேசான காயங்கள் அடைந்துள்ளனர். சாலை விபத்து தொடர்பாக 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story