மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 17 பேர் காயம்


மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 17 பேர் காயம்
x

காட்பாடி அக்ராவரத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 17 பேர் காயம் அடைந்தனர்.

வேலூர்

காட்பாடி

காட்பாடி அக்ராவரத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 17 பேர் காயம் அடைந்தனர்.

மாடு விடும் திருவிழா

காட்பாடியை அடுத்த அக்ராவரத்தில் நேற்று மாடுவிடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் காட்பாடி, லத்தேரி, வேலூர், சித்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டன. வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடக்கமாக பாதுகாப்பு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

170 மாடுகள்

அதனை தொடர்ந்து கால்நடைத்துறையினர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 170 மாடுகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்தது. அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டிருந்த இளைஞர்கள் மாடுகளை உற்சாகப்படுத்தினர்.

விழாவில் காளைகள் முட்டிதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இலக்கினை குறைந்த விநாடியில் கடந்த மாடுகளுகளின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2வது பரிசு ரூ.60 ஆயிரம் என மொத்தம் 72 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story