கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 17 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிப்பு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை


கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய  17 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிப்பு  மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
x

கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 17 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

சேலம்,

சாயப்பட்டறைகள்

சேலம் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி மற்றும் மேச்சேரி ஆகிய பகுதிகளில் விதிகளை மீறி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாக சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமலும், பூஜ்ஜிய நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றி வந்தததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மேச்சேரியில் 8 சாயப்பட்டறைகளிலும், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் 9 சாயப்பட்டறைகளிலும் கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் கூறும் போது, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்று மற்றும் பெறாமல் செயல்படும் சாயப்பட்டறைகளில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், பட்டறைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். இதுதவிர அனுமதி பெறாமல் சாயப்பட்டறை அமைக்க வாடகைக்கு நிலம் கொடுத்தால் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடருவதுடன் அவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என்றார்.


Next Story