முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 17 ஆயிரத்து 94 பேருக்கு சிகிச்சை
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 17 ஆயிரத்து 94 பேருக்கு சிகிச்சை
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 428 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக கடந்த மே மாதம் முதல் இதுவரை 17 ஆயிரத்து 94 பேருக்கு ரூ.48 கோடியே 44 லட்சம் மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள் ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வருமானசான்றிதழ் (ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ்) ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----
Related Tags :
Next Story