17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: 'போக்சோ' சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது


17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
x

17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: ‘போக்சோ’ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த மேகவர்ணம் (வயது 23) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியை சென்னை தியாகராயநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிறுமி உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட தகவலறிந்து மேகவர்ணம், அவரது நண்பர் சரவணன் ஆகியோர் சென்னை வந்தனர். சிறுமி தங்கியிருந்த வீட்டுக்கு சென்று அவரை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேகவர்ணம், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story