எருதுவிடும் விழாவில் 170 காளைகள் பங்கேற்பு


எருதுவிடும் விழாவில் 170 காளைகள் பங்கேற்பு
x

திருப்பத்தூர் அருகே நடந்த எருதுவிடும் விழாவில் 170 காளைகள் பங்கேற்றன. இதில் மாடுகள் முட்டி 5 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

எருதுவிடும் விழா

திருப்பத்தூர் அருகே உள்ள தோக்கியம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 காளைகள் பங்கேற்றன. காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருவிழா தொடர்வதற்கு முன்பு கால்நடைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது 3 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. எருது விடும் விழாவில் ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் கவுண்டர் எம்.வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் டி.சி.சாந்தசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவன் வரவேற்றார். போட்டியை க.தேவராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. அசோக்குமார் ஆ௳ியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கிராமநிர்வாக அலுவலர் பெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர்நிகழ்ச்சியை கண்காணித்தனர். கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.சுரேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

5 பேர் காயம்

எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் மீது காளைகள் முட்டியது. இதில் இதில் 5 பேர் காயமடைந்தனர். ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவனக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story