175 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
கம்பத்தில் கடைகளில் வைத்திருந்த 175 கிலோ பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து காந்தி சிலை வரை உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட 175 கிலோ பாலித்தீன் பைகள் மற்றும் 20 கிேலா காலாவதியான உணவு பண்டங்கள், சாயம் பூசிய கோழி இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு கடைகளில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.17 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு, உணவு தரம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராகவன் ஆகியோர் சோதனை நடத்த உத்தரவிட்டனர். அதன்பேரில் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்றார்.