சென்னை விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் திடீா் எந்திரக்கோளாறு 175 பேர் உயிர் தப்பினர்


சென்னை விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் திடீா் எந்திரக்கோளாறு 175 பேர் உயிர் தப்பினர்
x

சென்னை விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து விட்டதால் அதில் செல்ல இருந்த 175 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் புறப்பட தயாரானது. 169 பயணிகள் சோதனைகளை முடித்து விட்டு அந்த விமானத்தில் ஏற தயாராக இருந்தனா்.

விமானத்தின் தலைமை விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன் விமானத்தின் எந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமான எந்திரங்களில் பெரும் அளவு பாதிப்பு இருப்பது தெரிந்தது. அதே நிலையில் விமானம் வானில் பறப்பது பெரும் ஆபத்து என கூறி பயணிகளை விமானத்தில் ஏற்ற தடை விதித்தாா். இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

175 பேர் உயிர் தப்பினர்

விமான என்ஜினீயர்கள் குழுவினர் வந்து விமான எந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியவில்லை. காலதாமதம் ஏறப்படுவதை கண்ட பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ரத்து என அறிவிக்கப்பட்டது. பழுது சரி செய்யப்பட்ட பிறகு விமானம் துபாய் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவித்தனா்.

விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டு பிடித்துவிட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால் 169 பயணிகள், 6 விமான ஊழியா்கள் என 175 போ் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.


Next Story