குறைதீர்க்கும் கூட்டத்தில் 175 மனுக்கள் பெறப்பட்டன


குறைதீர்க்கும் கூட்டத்தில் 175 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 175 மனுக்கள் பெறப்பட்டன

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, உதவி கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story