முதுமலையில் 175 வகை வண்ணத்துப்பூச்சிகள்-கணக்கெடுப்பில் தகவல்


முதுமலையில் 175 வகை வண்ணத்துப்பூச்சிகள்-கணக்கெடுப்பில் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் 175 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நீலகிரி

கூடலூர்

முதுமலையில் 175 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பு பணி

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் 2 கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கூடலூர், முதுமலை வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் பரவலாக காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கூடலூர் அருகே பொன்னூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

கடந்த மாதம் 24, 25-ந் தேதிகளில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அனைத்து சரக வனப்பகுதியிலும் முதன் முறையாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றினர். தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர் வித்யா சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

175 வகை வண்ணத்துப்பூச்சிகள்

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- முதுமலையில் முதன்முறையாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 175 வகை வண்ணத்து பூச்சிகள் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் கணக்கெடுப்பின்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில அரசின் தமிழ்யேர்மன் என்ற வண்ணத்துப்பூச்சியும், எல்லோ ஜாக் சைலர் என்ற வண்ணத்துப்பூச்சியும் பதிவாகியுள்ளது.

வண்ணத்துப்பூச்சி இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் முதுமலை பகுதியில் காணப்படுகிறது. இப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் வாழ்வதற்கான காலநிலை நிலவுவதை உறுதி செய்துள்ளது. உயிர் சூழல் மண்டலத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடு முக்கிய இடத்தில் உள்ளது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story