தூத்துக்குடி மாவட்டத்தில் 18 மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் 18 மையங்களில்  கிராம உதவியாளர் பணிக்கு   எழுத்துத் தேர்வு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) 81 மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது.

கிராம உதவியாளர் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கே.ஜி.எஸ். மேல்நிலைப் பள்ளி, திருச்செந்தூா் வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாயர்புரம் போப்ஸ் கல்லூரி, சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் நேஷனல் மேல்நிலைப் பள்ளி, ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீனிவாசா நகர் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எட்டயபுரம் குமாரகிரி சி.கே.டி.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கீழஈரால் டான்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கயத்தாறு அன்னைநகர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி கே.ஆர்.நகர் நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாத்திகுளம் மகாராஜபுரம் சீனி மெட்ரிகுலேஷன் பள்ளி, கே.ஆா்.நகர் கவியரசா் அண்ணாமலை ரெட்டியார் நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்வமரத்துப்பட்டி ஷாரோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு நடக்கிறது.

அனுமதி சீட்டு

விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலமோ அல்லது இணையவழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியில் சென்று பதிவெண், செல்போன் எண்ணைப் பதிவு செய்தோ அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு பதிவஞ்சலில் அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி தேர்வில் பங்கேற்க வேண்டும், என மாவட்டகலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story