18-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
கொள்ளிடம் பகுதியில் 18-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி மின் கோட்டத்திற்குட்பட்ட ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 18-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கொள்ளிடம், அணைக்காரன் சத்திரம், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், புதுப்பட்டினம், புத்தூர், குன்னம், எருக்கூர், கடவாசல், வடகால், திருமுல்லைவாசல், பழையபாளையம், தாண்டவன்குளம், மாதானம், வேட்டங்குடி, மகேந்திரபள்ளி, காட்டூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவைல செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story