காரியாபட்டி பகுதியில் 18 ஆடுகள் திருட்டு
காரியாபட்டி பகுதியில் 18 ஆடுகளை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் 18 ஆடுகளை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 ஆடுகள் திருட்டு
காரியாபட்டி அருகே சிறுகுளம் கிராமத்தில் முத்துவேல் (வயது 33) என்பவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் தனக்கு சொந்தமான 12 வெள்ளாடுகளை வீட்டிற்கு வெளியே கட்டி விட்டு மழை பெய்ததால் வீட்டிற்குள் தூங்க சென்றார். பின்னர் நன்ளிரவில் எழுந்து பார்த்த போது வீட்டிற்கு அருகில் கட்டி இருந்த 12 வெள்ளாடுகளை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் ஆடுகளை தேடி பார்த்தார். ஆனால் ஆடு கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துவேல் அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ெறாரு சம்பவம்
அதேபோல நரிக்குடி அருகே உவர்குளம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் (37) என்பவர் ஆடுகள் வளர்ந்து வந்தார். இவருக்கு சொந்தமான 6 ஆடுகளை தனது வீட்டின் முன்பு கட்டிவிட்டு தூங்கசென்றார். பின்னர் அதிகாலை எழுந்து பார்த்தபோது 6 ஆடுகளையும் யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதியழகன் நரிக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.