கிரைண்டர் மோட்டாரில் மறைத்து கடத்தி வந்த ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்
கிரைண்டர் மோட்டாரில் மறைத்து கடத்தி வந்த ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
செம்பட்டு:
அதிகாரிகள் சோதனை
திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
349 கிராம் தங்கம் பறிமுதல்
அப்போது ஒரு பயணி கிரைண்டர் மோட்டாரில் மறைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான 349 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
Related Tags :
Next Story