அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம்


அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம்
x

அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம்

ராமநாதபுரம்

சாயல்குடி

சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உமையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் நிறைவு நாளில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு நடை அடைக்கப்படும். இதனால் ஆடி மாதம் முழுவதும் அமமன் ராமேசுவரம் தீர்த்தங்களில் புனித நீராட செல்வதாகவும், கோவிலில் அம்மன் ஆவணி முதல் நாள் தன்னிடத்திற்கு வருவார் என்பது ஐதீகம். இதையடுத்து ஆவணி முதல் நாள் கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடக்கும். அப்போது ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதி பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மனை தரிசித்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.


Next Story