1,807 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது


1,807 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது
x

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 1,807 டன் யூரியா உரம் வந்தது.

தஞ்சாவூர்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

உரத்தட்டுப்பாடு

இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களி்ல் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தேவையான உரங்களை கொள்முதல் செய்து தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

1,807 டன் யூரியா உரம்

இந்தநிலையில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான 1,807 டன் யூரியா உரம் சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நேற்று தஞ்சைக்கு வந்தது. 31 வேகன்களில் வந்த இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.





Next Story