187 பள்ளி-கல்லூரி வாகனங்கள் ஆய்வு


187 பள்ளி-கல்லூரி வாகனங்கள் ஆய்வு
x

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாகனங்கள் ஆய்வு

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்துக்கு உட்பட்ட சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய தாலுகாவில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நேற்று சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது 187 பள்ளி, கல்லூரி வாகனங்கள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனை சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், சிவகாசி வட்டார போக்கு வரத்து அலுவலர் குமரவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கண்சிகிச்சை முகாம்

இந்த ஆய்வுக்கு வந்த பள்ளி, கல்லூரி வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்களுக்கு சிறப்பு கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு கண் பரிசோதனை செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. அதே போல் சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது சிவகாசி தாசில்தார் லோகநாதன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பூர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரிவிதிராஜ் ஒவ்வொரு வாக னங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து அவசர வழிகளை செயல்படுத்தி காட்ட உத்தரவிட்டார். ஆய்வுக்கு வந்த 15 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை உடனே சரி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story