19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்
கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் ரேஷன் கடையில் குடவாசல் கீழ்அடிச்சதெருவைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் சரவணன்(வயது 25) விற்பனையாளராக உள்ளார். இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் கடையை திறந்து ஒரு சரக்கு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த வேனை மடக்கிப்பிடித்து, நாச்சியார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விசாரணை
தகவலின்பேரில், அங்கு வந்த போலீசார் 19 மூட்டை ரேஷன் அரிசியுடன் அந்த வேனை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இந்த ரேஷன் அரிசி எங்கு, யாருக்காக கடத்தி செல்ல முயற்சி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story