19-ந்தேதி மின் நிறுத்தம்
திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் 19-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவாரூர் மின்வாரிய இயக்குதல், பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மற்றும் கப்பல் நகர், அடியக்கமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெரும் பகுதிகளான திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், அடியக்கமங்கலம், இ.பி காலனி, சிதம்பரம் நகர், பிலாவடிமூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர்,, புதுபத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.