19 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
படந்தாலுமூட்டில் 19 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரி
களியக்காவிளை,
களியக்காவிளை போலீசார் படந்தாலுமூடு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்த வியாபாரி சந்திரபாபு போலீசாரை கண்டதும் திடீரென தப்பியோடினார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் சந்திரபாபுவின் கடையை சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக 19 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா உள்ளிட்டவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வியாபாரி சந்திரபாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story