மது, சாராயம் விற்ற 19 பேர் கைது
புத்தாண்டு தினத்தன்று மது, சாராயம் விற்ற 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
2023 ஆங்கில புத்தாண்டை இளைஞர்கள் கேக் வெட்டியும், மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை நண்பர்களுடன் அருந்தி உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், மது, சாராயம் விற்றதாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 மதுபாட்டில்கள், 22 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story