19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

திருச்சி மாநகரில் கடந்த 3 மாதங்களில் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 975 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 3 மாதங்களில் 5 ரவுடிகள் உட்பட 19 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.


Next Story