நாடாளுமன்ற தேர்தல் சோதனையில் இதுவரை ரூ.193 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்


நாடாளுமன்ற தேர்தல் சோதனையில் இதுவரை ரூ.193 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்
x

பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதை மீறி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந் தேதியில் இருந்து இன்று வரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில், ரூ.82.63 கோடி ரொக்கப் பணம், ரூ.4.34 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள், ரூ.84 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.89.41 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.15.43 கோடி மதிப்புள்ள இலவச பரிசுப் பொருட்கள் அடங்கும்.


Next Story