தேங்காப்பட்டணம் அருகே 1960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


தேங்காப்பட்டணம் அருகே 1960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

தேங்காப்பட்டணம் அருகே 1960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

புதுக்கடை:

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி பகுதியில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு டெம்போவை அதிகாரிகள் நிறுத்தும்படி சைகை காட்டினார். அதிகாரிகளை கண்ட டிரைவர் டெம்போவை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் டெம்போ சோதனை செய்தபோது, அதில் 56 பிளாஸ்டிக் கேன்களில் 1960 லிட்டர் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் வெள்ளை நிற மானிய மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து அரசு கிடங்கியிலும், டெம்போவை புதுக்கடை போலீஸ் நிலையத்திலும் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மண்எண் ெணய்யை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.


Next Story