அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா


அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இந்த கோவில் அட்ட வீரட்ட தளங்களில் ஒரு கோவிலாக உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு மாசி மாதம் 26- ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022-ம் ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கு நிறைவு விழா

இந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழாவையொட்டி தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் 3 -யாக குண்டங்கள் அமைத்து கோவில் குருக்கல்களான கணேசகுருக்கள், ராமலிங்க குருக்கள், சண்முகசுந்தர குருக்கள், ஹரி கிருஷ்ண குருக்கள், உள்ளிட்ட 20- சிவாச்சாரியார்கள் திருமுறை பாராயணம், வேத பாராயணம், மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது.

தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story