2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது


2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது
x

பேரணாம்பட்டை சேர்ந்த 2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

பேரணாம்பட்டை சேர்ந்த 2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கோட்டை காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 47). அதே பகுதி கள்ளிப்பேட்டையை சேர்ந்தவர் பசுபதி (24). சாராயம் விற்ற வழக்கில் இருவரையும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இருவர் மீதும் சாராயம் விற்றதாக பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இருவரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் இருவரிடமும் போலீசார் வழங்கினர்.


Next Story