கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கைது


கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கைது
x

வாணியம்பாடியில் பதுங்கியிருந்த கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

சென்னை எண்ணூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொலை மற்றும் அடிதடி செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்கிற பாம்பு நாகராஜ், எண்ணூர் ஏ.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த பாலா என்கிற யுவராஜ் என்பது தெரியவந்தது.

நாகராஜ் என்கிற பாம்பு நாகராஜ் மீது 2 கொலை வழக்குகள், 1 கஞ்சா வழக்கு, 6 கொலை முயற்சி வழக்குகள், 16 அடிதடி வழக்குகள், 2 திருட்டு வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என மொத்தம் 24 வழக்குகள் இருப்பதும், பாலா என்கிற யுவராஜ் மீது 5 வழிப்பறி வழக்குகள், 2 திருட்டு வழக்குகள், 2 அடிதடி வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் எண்ணூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story