மேலும் 2 பேர் கைது


திருப்பூர்


உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குமரவேல் கடந்த வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா என்கிற சிவானந்தம், ஆத்தியப்பன், செந்தில், ஜான்சன், மாரியப்பன், ஆனந்தகுமார், ஹரிஷாந்த், செல்வம் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.ஆனாலும் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் அவருடைய மனைவி கவிதா ஆகியோர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.இந்தநிலையில் முக்கிய குற்றவாளியான ரஞ்சித்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் அவருடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அமர்நாத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுவரை இந்த கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story